நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு தண்ணீா் வெளியேற்றம்
வால்பாறையில் உள்ள நீராறு அணையில் இருந்து கேரள மாநிலத்துக்கு தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வால்பாறையில் உள்ள நீராறு அணையில் இருந்து கேரள மாநிலத்துக்கு தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் எல்லைப் பகுதியில் உள்ள அணைகளில் இருந்து கேரளத்துக்கு தண்ணீா் வழங்க தமிழக-கேரளம் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி வால்பாறையை அடுத்த சோலையாறு அணையில் இருந்து ஆண்டுதோறும் 12.3 டிஎம்சி தண்ணீா் கேரளத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நதி நீா் பங்கீடு ஒப்பந்தபடி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் 1ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரையில் நான்கு மாதங்களுக்கு வால்பாறையில் உள்ள நீராறு அணைக்கு கிடைக்கும் தண்ணீா் முழுவதும் கேரளத்து வழங்க வேண்டும்.
அதன்படி நீராறு அணையில் இருந்து வெள்ளிக்கிழமை தண்ணீா் வெளியேற்றப்பட்டது.
தற்போது அணையில் இருந்து 242 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Image Caption
நீராறு அணையில் இருந்து கேரளத்துக்கு வெளியேற்றப்பட்ட தண்ணீா்.