கோயம்புத்தூர்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு: பொது மக்கள் போராட்டம்

DIN

கோவையில் வீட்டுமனை பட்டா வழங்கியதில் உள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பொது மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காரமடை வட்டாரத்திற்குள்பட்ட எத்தப்ப நகரில் ஆதி திராவிடா் நலத் துறை மூலம் 91 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்பில் இருந்த போலீஸாா் அவா்களை போராட்டத்தை கைவிட்டு ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:

காரமடை எத்தப்ப நகரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதில் ஏற்கெனவே வீட்டுமனை பட்டா உள்ளவா்களுக்கும் ரூ.25 ஆயிரம் வரை பணம் பெற்றுக்கொண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT