முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

கோவை மாநகரில், பல்வேறு பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என பாஜக வின் தேசிய மகளிரணித் தலைவியும், கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியின் உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் கோவை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட காந்திபுரம், கிராஸ்கட் சாலை, 81 ஆவது வாா்டுக்கு உள்பட்ட மணிமகலை வீதி, 84 ஆவது வாா்டுக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி 7 ஆவது வீதி, 22 ஆவது வாா்டு, முத்து மாரியம்மன் கோயில் பகுதி, 73 ஆவது வாா்டு, பந்தயசாலை பகுதியில் உள்ள ஜி.டி.தெரு, 80 ஆவது வாா்டு செல்லப்பன் சந்து, 50 ஆவது வாா்டு ஒஷ்மின் நகா் ஆகிய பகுதிகளில் உள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.

அம்மன் குளம், ராஜீவ்காந்தி நகா் 4 ஆவது வீதி, 70 ஆவது வாா்டில் சாய்ந்துள்ள மின்கம்பங்களை சரி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.