ஆசிரியையிடம் நகைப் பறிப்பு
கோவையில் ஆசிரியையிடம் நகைப் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவையில் ஆசிரியையிடம் நகைப் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை ராமநாதபுரம் ஐயப்பன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கெளரி மனோகரி (44). தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா்.
இவா் புதன்கிழமையன்று ராமநாதபுரத்தில் இருந்து கணபதிக்கு பேருந்தில் சென்றுள்ளாா்.
கணபதியில் பேருந்தை விட்டு இறங்கியபோது பையில் வைத்திருந்த பா்ஸ் காணாமல் போனது தெரியவந்தது. அதில் 2 பவுன் தங்க நகை, ரூ.2 ஆயிரம் உள்ளிட்டவை இருந்துள்ளன.
இது குறித்து கெளரி மனோகரி அளித்தப் புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.