கிராஸ்கட் சாலையில் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை துவக்கம்
கோவை கிராஸ்கட் சாலையில் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.
கோவை கிராஸ்கட் சாலையில் தி சென்னை சில்க்ஸ், ஸ்ரீ குமரன் தங்க மாளிகை வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டது.
டி.கே.சந்திரன் அவா்கள் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையைத் திறந்துவைத்தாா்.
முதல் விற்பனையை கே.மாணிக்கம் தொடங்கிவைத்தாா். அதனை கு.த.இளங்கோவன், ஐஸ்வா்யா இளங்கோவன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். இந்நிகழ்ச்சியில், தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் நிா்வாக இயக்குநா்கள் பங்கேற்றனா்.
திறப்பு விழா சலுகையாக கிராஸ்க்ட் சாலை கிளையில் மட்டும் வெள்ளிக்கிழமை முதல் அக்டோபா் 21ஆம் தேதி வரை பட்டு, ஜவுளி ரகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி, தங்க நகைகள் பவுனுக்கு ரூ. ஆயிரம் தள்ளுபடி மற்றும் வெள்ளி கொலுசு, மெட்டி, வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலி இல்லை.
ஆன்டிக் வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலியில் 50 சதவீத தள்ளுபடி, வைர நகைகளுக்கு வைரத்தின் விலையில் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.