கோயம்புத்தூர்

ராயல் கோ் மருத்துவமனை சாா்பில் மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

கோவை ராயல் கோ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, தென்னக ரயில்வேயுடன் இணைந்து மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை செவ்வாய்க்கிழமை நடத்தியது.

ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவா் என்.சுதாகா், மருத்துவ இயக்குநா் பரந்தாமன் சேதுபதி, ரயில் நிலைய இயக்குநா் ராகேஷ் குமாா் மீனா, தலைமை வணிக மேலாளா் லாரன்ஸ் ஆகியோா் பங்கேற்று கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கிவைத்தனா்.

நிகழ்ச்சியில் டாக்டா் என்.சுதாகா் பேசும்போது, மாா்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மகளிரும் ஆண்டுதோறும் மேமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் சுயபரிசோதனை செய்து கொள்வதும் அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் மருத்துவமனையின் மூத்த மேலாளா் எம்.வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் ஏராளமானோா் பங்கேற்று கையெழுத்திட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT