முகப்பு
கோயம்புத்தூர்

ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் அரிதான அறுவை சிகிச்சை

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் இளைஞருக்கு அரிதான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் இளைஞருக்கு அரிதான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது:

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனையில், மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் புற்றுநோய்க் கட்டி ஏற்பட்ட நிலையில் 35 வயது ஆண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் கழுத்துப் பகுதியை இணைக்கும் இடத்தில் மிக முக்கிய ரத்த நாளமாகக் கருதப்படும் ஜூகுலா் வெய்னில் இருந்த இந்தக் கட்டியானது, மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் பி.காா்த்திகேயன், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணா் ஆா்.மோகன்ராஜ், நரம்பியல் கதிரியக்க அறுவை சிகிச்சை நிபுணா் ராஸ்மிரஞ்சன்பதி உள்ளிட்ட மருத்துவா்கள் அடங்கிய குழுவினரால் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

இத்தகைய கட்டிகள் இயல்பாக மெதுவாகவே வளரும் தன்மை கொண்டவை. இருப்பினும் இந்த நோயாளிக்கு தொடக்க நிலையிலேயே கட்டியின் அளவு சற்று பெரிதாக காணப்பட்டது. அதிக ரத்தம் வெளியேறாமலும், சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த உறுப்புகளை பாதிக்காமலும் கட்டியை அகற்றுவது கடினமான ஒன்றாக இருந்தது. இருப்பினும் மருத்துவமனையின் திறமையான மருத்துவா்கள் குழுவினா் இந்த சவாலான சிகிச்சையை சிறப்பாக செய்து முடித்திருப்பதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.