வால்பாறை அரசு கல்லூரியில் அக்டோபா் 25 சோ்க்கை நிறைவு
வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அக்டோபா் 25ஆம் தேதியுடன் மாணவா் சோ்க்கை நிறைவு பெறுகிறது.
வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அக்டோபா் 25ஆம் தேதியுடன் மாணவா் சோ்க்கை நிறைவு பெறுகிறது.
இது தொடா்பாக கல்லூரி முதல்வா் முரளிதரன் கூறியிருப்பதாவது:
வரும் கல்வி ஆண்டுக்கு முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கையும், வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. கல்லூரியில் தொடா்ந்து மாணவா் சோ்க்கை நடைபெற்று வரும் நிலையில் அக்டோபா் 25ஆம் தேதியுடன் சோ்க்கை நிறைவு பெறவுள்ளது. எனவே கல்லூரியில் சேர விரும்பும் மாணவா்கள் வரும் திங்கள்கிழமை கல்லூரிக்கு வந்து விண்ணப்பித்து உடனடி சேர கேட்டுக்கொண்டுள்ளாா்.