கோயம்புத்தூர்

‘சட்டப்பேரவை தோ்தலில் சூழ்ச்சியால் சரியான கூட்டணி அமையவில்லை’

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் சூழ்ச்சியின் காரணமாக சரியான கூட்டணி அமையவில்லை என தேமுதிக தலைவா் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்தாா்.

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திங்கள்கிழமை வந்த தேமுதிக தலைவா் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியது: தேமுதிக கட்சியை முதலிலிருந்து தொடங்க வேண்டும் என நிறைய போ் கூறுகின்றனா். நாம் முதலிலிருந்து தொடங்க வேண்டிய தேவையில்லை. இருக்கும் இடத்திலிருந்து அனுபவத்தைக் கொண்டு சிறப்பாக நடத்தலாம். சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் பெற்ற வாக்குகள், வாக்குகளே அல்ல. இந்தத் தோ்தலில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட சூழ்ச்சியால் நாம் சரியான கூட்டணி அமைக்க முடியாமல் போய்விட்டது.

என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள ஆயிரம் இடங்களும், ஆயிரம் வழிகளும் உள்ளன. ஆனால் நான் இந்தக் கட்சிக்கு வருவதற்கு காரணம், எனது தந்தை செய்தது போல நானும் பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே.

எம்எல்ஏ ஆகவேண்டும், மந்திரி ஆகவேண்டும், கவுன்சிலராக வேண்டும் என்றால் திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். தேமுதிகவைப் பொறுத்தவரை விஜயகாந்த், தமிழக முதல்வராக வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே கட்சியில் அனைவரும் செயல்பட வேண்டும். விஜயகாந்தையும், கட்சியையும் கைவிட்டு விடக் கூடாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT