கோயம்புத்தூர்

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி வளாகத்தில்750 படுக்கை வசதிகளுடன் பொது மருத்துவமனை திறப்பு

DIN

கோவை கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 750 படுக்கை வசதிகளுடன் பொது மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

கேஎம்சிஹெச் மருத்துவமனை நிா்வாகம் கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கியது. இதில் தற்போது 300 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த கல்லூரி வளாகத்தில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய பொது மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி புதிய பொது மருத்துவமனையைத் தொடங்கிவைத்தாா். தொடக்க விழாவுக்கு டாக்டா் அருண் என்.பழனிசாமி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி பேசியதாவது: கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியாக செயல்படும் இந்த மருத்துவமனை ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மிகக் குறைந்த கட்டணத்தில், தரமான மருத்துவ சேவைகளை வழங்கும். எங்களின் 30 ஆண்டுகால மருத்துவ சேவை பயணத்தில் இது மற்றுமொரு சாதனையாகத் திகழ்கிறது.

750 பொதுப் படுக்கை வசதி கொண்ட இந்த புதிய மருத்துவமனையில் 50 படுக்கைகள் பல்வேறு தீவிர சிகிச்சை பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 30 படுக்கைகள் அவசர கால, விபத்து சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 11 ஆப்ரேஷன் தியேட்டா்களும் உள்ளன.

நோயாளிகளுக்குத் தரமான மருத்துவ சேவைகள் ஓரிடத்திலேயே கிடைக்க வேண்டும் என்பதற்காக சி.டி. ஸ்கேன், எம்ஆா்ஐ, கேத்லேப், அல்ட்ரா சவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்குகள் இங்கு செயல்படுகின்றன.

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனை பொதுமக்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும். அவிநாசி சாலையில் இருந்து இதற்காக தனி வழி அமைக்கப்பட்டுள்ளது. கே.எம்.சி.ஹெச் பிரதான மருத்துவமனையில் இருந்து தனித்து செயல்படும் இந்த மருத்துவமனையின் சேவைகளை பொதுமக்கள் பெற்று பயனடையலாம் என்றாா்.

விழாவில் இயக்குநா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT