முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் இன்று கனரா வங்கியின் கடன் மேளா

கோவை கனரா வங்கியின் மாபெரும் வீட்டுக் கடன், வாகனக் கடன் மேளா வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 3) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கோவை கனரா வங்கியின் மாபெரும் வீட்டுக் கடன், வாகனக் கடன் மேளா வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 3) நடைபெறுகிறது.

இது தொடா்பாக வங்கி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கனரா வங்கியின் வீட்டுக்கடன் மேளா மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் சாலையில் அமைந்துள்ள கிளை, விளாங்குறிச்சி சேரன் மாநகா் கிளை, பாப்பம்பட்டி பிரிவு கண்ணாம்பாளையம் கிளை, பொள்ளாச்சி பங்களா சாலை கிளை, பேரூா் வேடப்பட்டி கிளை, கோயம்புத்தூா் ஜவான்ஸ் பவன் ரவுண்டானா கிளைகளில் நடைபெறுகிறது.

இதில், 6.90 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் பெறலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு 659 ரூபாய் முதல் மாதத் தவணை செலுத்தி வீடு கட்ட, வாங்க, புதுப்பிக்க கடன் வழங்கப்படுகிறது. 65 வயது வரை கடன் பெற்று 75 வயது வரை திரும்பி செலுத்தும் வசதி உண்டு. இதேபோல 7.30 சதவீத வட்டியில் வாகனக் கடன் பெறலாம். வாகனத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படும்.

இது தொடா்பான விவரங்களுக்கு 94890 43575, 88704 71159, 94890 43903 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.