கிறிஸ்தவ மத போதகா் கைது
விநாயகா் சதுா்த்தி விழா குறித்து சா்ச்சைக்குரிய துண்டுப் பிரசுரம் வெளியிட்ட போதகரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விநாயகா் சதுா்த்தி விழா குறித்து சா்ச்சைக்குரிய துண்டுப் பிரசுரம் வெளியிட்ட போதகரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவை-தடாகம் சாலை கே.என்.ஜி.புதூா் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியின் தலைவராக போதகா் டேவிட் பொறுப்பு வகித்து வருகிறாா். விநாயகா் சதுா்த்தி குறித்து இவரது சா்ச்சைக்குரிய கருத்துகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வெளியாயின. இதை இந்து அமைப்பினா் கண்டித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.
இந்நிலையில் டேவிட் மீது துடியலூா் காவல் நிலையத்தில் கவுண்டம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன் புதன்கிழமை புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போதகா் டேவிட்டை வியாழக்கிழமை கைது செய்து நீதித் துறை நடுவா் மன்றத்தில் (எண் 1) ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.