முகப்பு
தமிழ்நாடு

தேஜ கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அனைத்து ”சார்”களும் சிறைக்குச் செல்வது உறுதி: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அனைத்து ”சார்”களும் சிறைக்குச் செல்வது உறுதி என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 மார்ச், 2026 at 11:40 AM
டிடிவி தினகரன் - படம் - யூடியூப் / நரேந்திர மோடி
பகிர்:

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அனைத்து ”சார்”களும் சிறைக்குச் செல்வது உறுதி என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி புகார் - ஏற்கனவே தமிழகத்தை உலுக்கிய பாலியல் புகாரில் தொடர்புடைய அந்த "சார்" கைது செய்யப்படாததன் விளைவா ?

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர், அப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் மாணவியின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தியதாக எழுந்திருக்கும் புகார் அங்கு பயிலும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் ”சார்” இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தற்போதைய பாலியல் புகாரின் பின்னணியிலும் அதே ”சார்” இருப்பாரோ ? என்ற சந்தேகம் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, உலக அளவில் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த பாலியல் குற்றச்சாட்டு மீது விரிவான விசாரணை மேற்கொண்டு, பேராசிரியர் குற்றத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்தும் நேரத்தில், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அனைத்து ”சார்”களும் சிறைக்குச் செல்வது உறுதி என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

summary

It is certain that all 'Sirs' involved in sexual harassment allegations will go to jail once the National Democratic Alliance (NDA) government is formed," stated AMMK General Secretary TTV Dhinakaran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.