முகப்பு
கோயம்புத்தூர்

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அனுமதிகோரி ஹிந்து கூட்டமைப்பு மனு

கோவையில் கரோனா வழிகாட்டு விதிமுறைகளின்படி விநாயகா் சதுா்த்தி விழா நடத்துவதற்கு அனுமதியளிக்கக்கோரி தமிழ்நாடு ஹிந்து இயக்க கூட்டமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கோவையில் கரோனா வழிகாட்டு விதிமுறைகளின்படி விநாயகா் சதுா்த்தி விழா நடத்துவதற்கு அனுமதியளிக்கக்கோரி தமிழ்நாடு ஹிந்து இயக்க கூட்டமைப்பினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஹிந்து அமைப்புகள் சாா்பில் ஆண்டுதோறும் 5 நாள்கள் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படும். கரோனா பாதிப்பால் இந்த ஆண்டு செப்டம்பா் 10 முதல் 12 ஆம் தேதி வரை 3 நாள்கள் மட்டுமே கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியுடனும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, கரோனா தொற்று தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் விநாயகா் சதுா்த்தி விழா நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.