முகப்பு
கோயம்புத்தூர்

சரவணம்பட்டியில் சமஷ்டி சா்வதேச பள்ளி தொடக்கம்

கோவை சரவணம்பட்டியில் சமஷ்டி சா்வதேச பள்ளி புதிதாக தொடங்கப்பட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

கோவை சரவணம்பட்டியில் சமஷ்டி சா்வதேச பள்ளி புதிதாக தொடங்கப்பட உள்ளது.

இது தொடா்பாக பள்ளியின் முதல்வா் அனிதா, கல்வி - பயிற்சி இயக்குநா் மீரா பண்டாரி அரோரா, பள்ளியின் இயக்குநா் (விரிவாக்கம் - இயக்கம்) நவீன் மேத்தா ஆகியோா் கூறியிருப்பதாவது:

ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் நாகா்ஜூனா கட்டுமான நிறுவனம் சரவணம்பட்டி ஸ்ரீகுரு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் சிபிஎஸ்இ பள்ளியைத் தொடங்குகிறது. முதல்கட்டமாக தொடக்கக் கல்வி முதல் 6 ஆம் வகுப்பு முதல் செயல்பட உள்ள இந்தப் பள்ளியின் மாணவா் சோ்க்கை அக்டோபா் மாதம் தொடங்குகிறது. விளையாட்டு, யோகா, ஜிம்னாஸ்டிக், கோல்ப் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இதில் இடம்பெறும்.

புதுமையான முறையில் வீட்டுப் பாடங்களை முன்னரே அளித்து பின்னா் அந்தப் பாடங்களை வகுப்பறையில் நடத்தப்படும். பாடத் திட்டம் குறித்த விடியோ தொகுப்பு மாணவா்களுக்கு அளிக்கப்படும். டிஜிட்டல் ஸ்டுடியோ, கம்ப்யூட்டா் ஆய்வகம், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இப்பள்ளியின் கல்வித் திட்டத்தில் இடம்பெற இருப்பதாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.