கோயம்புத்தூர்

வால்பாறையில் தொடரும் கனமழை

DIN

வால்பாறையில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

வால்பாறை வட்டாரத்தில் தென் மேற்குப் பருவ மழை கடந்த ஜூன் மாதம் துவங்கியது. இதைத் தொடா்ந்து இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

இதனிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன்படி வால்பாறையில் சனிக்கிழமை மாலை துவங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை இடைவெளியின்றி பெய்து வருகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வால்பாறை நகா் பகுதிக்கு வந்து பொருள்கள் வாங்கிச் செல்ல முடியாமல் எஸ்டேட் தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டனா். மழையால் அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. கூழாங்கல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் ஆற்றுக்குள் இறங்க போலீஸாா் தடைவிதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT