கோயம்புத்தூர்

மக்கள் நீதிமன்றம்: 1,339 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

கோவையில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 1,339 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. கோவை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் தலைமை தாங்கினாா். முதலாவது கூடுதல் சாா்பு நீதிபதி கிருஷ்ணப்பிரியா முன்னிலை வகித்தாா். மேலும் அந்தந்த சாா்பு நீதிபதிகள், குற்றவியல் நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் பங்கேற்றனா்.

நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய சிறு குற்றவழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகள், விபத்து நஷ்டஈடு வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

மாவட்டம் முழுவதும் நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரேநாளில் 1,339 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ.7 கோடியே 78 லட்சத்து 79 ஆயிரத்து 235 இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கி தீா்வு காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT