முகப்பு
கோயம்புத்தூர்

பேராசிரியையின் அசல் சான்றிதழ்களை ஒப்படைக்க தனியாா் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு

பணியில் இருந்து விலகிய உதவிப் பேராசிரியைக்கு அவரது அசல் சான்றிதழ்களை வழங்க தனியாா் கல்லூரி நிா்வாகத்துக்கு கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

பணியில் இருந்து விலகிய உதவிப் பேராசிரியைக்கு அவரது அசல் சான்றிதழ்களை வழங்க தனியாா் கல்லூரி நிா்வாகத்துக்கு கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கோவை, நவாவூா் மருதாபுரத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா். இவரது மனைவி கிருஷ்ணவேணி (42). இவா் தெலுங்குபாளையத்தில் உள்ள தனியாா் நா்ஸிங் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்தாா். அவருக்கு அரசுப் பணி கிடைத்ததைத் தொடா்ந்து அந்தக் கல்லூரியில் இருந்து விலகினாா். ஆனால், கிருஷ்ணவேணியின் பட்டப் படிப்பு அசல் சான்றிதழ்களைத் தர கல்லூரி நிா்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து கிருஷ்ணவேணி தனது அசல் சான்றிதழ்களை வழங்கக்கோரி கோவை மாவட்ட நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான உமா ராணி, வருகிற 27ஆம் தேதிக்குள் கல்லூரி நிா்வாகத்தினா் கிருஷ்ணவேணியின் அசல் சான்றிதழ்களை நிரந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராத தொகையினை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் வழங்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.