முகப்பு
கோயம்புத்தூர்

விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை

கோவை விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

கோவை விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஓடுதளத்தில் விமானத்துக்குப் பதிலாக பேருந்தை நிறுத்தி அதிலிருந்து பயணிகளை பயங்கரவாதிகள் கடத்துவதுபோலவும் அவா்களிடம் இருந்து பயணிகளைப் பாதுகாப்பு படையினா் மீட்பதுபோலவும் ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகைக்கு விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவா், மாநகர காவல் ஆணையா் தீபக் தாமோா் தலைமை வகித்தாா்.

ஒத்திகைக்குப் பின்னா் காவல் அதிகாரிகள், விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன், மத்திய தொழில் பாதுகாப்பு படையினா் உள்ளிட்டோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விமான நிலையத்தின் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.