முகப்பு
கோயம்புத்தூர்

உள்ளாட்சி இடைத்தோ்தல்: இன்று வேட்புமனு பெறப்படும்

கோவை மாவட்டத்தில், கிராம ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு சனிக்கிழமை வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

கோவை மாவட்டத்தில், கிராம ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு சனிக்கிழமை வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெறுவதையொட்டி, வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா் மற்றும் கிராம ஊராட்சித் தலைவா்கள் ஆகிய பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிராம ஊராட்சி அலுவலகத்திலும் சனிக்கிழமை(18 ஆம் தேதி) சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலம் வேட்புமனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.