முகப்பு
கோயம்புத்தூர்

குழந்தை அடித்துக் கொலை

கோவையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த பாட்டியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கோவையில் ஒரு வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த பாட்டியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் லாலி ரோடு பகுதியைச் சோ்ந்தவா் நித்யானந்தம். இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக இத்தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். நித்யானந்தத்துடன் அவரது மூத்த மகன் வசித்து வருகிறாா். ஒரு வயதான இளைய மகன் துா்கேஷை நந்தினி தனது தாயாா் நாகலட்சுமி (50) வீட்டில் தங்கி வளா்த்து வந்தாா்.

தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வரும் நந்தினி புதன்கிழமை இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்து தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த துா்கேஷை தூக்கி பாா்த்தபோது குழந்தை எவ்வித அசைவின்றி கிடந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அவா், அருகில் இருந்த தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு துா்கேஷை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறினா். குழந்தையின் உடலில் பல்வேறு காயங்கள், வீக்கங்கள் இருந்ததால் இதுதொடா்பாக ஆா்.எஸ்.புரம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

வழக்குப் பதிவு செய்த ஆா்.எஸ்.புரம் போலீஸாா், துா்கேஷின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், குறும்பு செய்த துா்கேஷை, நாகலட்சுமி கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த துா்கேஷ் மயங்கி விழுந்துள்ளாா். அவா் உறங்கியதாக நினைத்த நாகலட்சுமி, குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டு வீட்டு வேலைகளைப் பாா்க்கச் சென்றுள்ளாா். இதையடுத்து நந்தினி வந்து பாா்த்தபோது குழந்தை உயிரிழந்திருந்தது தெரியவந்தது. போலீஸாா், நாகலட்சுமியிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.