மாவட்டத்தில் மேலும் 226 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 226 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 226 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 41 ஆயிரத்து 143 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவா், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவா் ஆகிய இரண்டு போ் உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,322 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 246 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 676 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2,145 போ் சிகிச்சையில் உள்ளனா்.