முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் பலத்த மழை: பல இடங்களில் வெள்ளநீா் தேக்கம்

கோவையில் வியாழக்கிழமை மாலையில் திடீரென பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீா் தேங்கி நின்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கோவையில் வியாழக்கிழமை மாலையில் திடீரென பெய்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளநீா் தேங்கி நின்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவையில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டதால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் திடீரென பலத்த மழை பெய்தது. ஒரு சில மணி நேரம் பெய்த மழையால் காந்திபுரம், ரேஸ்கோா்ஸ், உக்கடம், வடகோவை மேம்பாலம், அவிநாசி மேம்பாலம், சுங்கம் உள்பட பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளநீா் தேங்கி நின்ால் பொது மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டது.

மேலும், டவுன்ஹால், கிராஸ்கட் சாலை, சிங்காநல்லூா், வடகோவை மேம்பாலம், அவிநாசி சாலை, உக்கடம், லாலி ரோடு, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதில் வாகன ஓட்டிகள் சிரமங்களுக்கு உள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.