முகப்பு
கோயம்புத்தூர்

கே.ஐ.டி. கல்லூரியில் நாட்டு மாடுகள், இயற்கை விவசாயம் பற்றிய கருத்தரங்கு

கோவை கண்ணம்பாளையம் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் நாட்டு மாடுகள், இயற்கை வேளாண்மை பற்றிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

கோவை கண்ணம்பாளையம் கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் நாட்டு மாடுகள், இயற்கை வேளாண்மை பற்றிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் பொங்கலூா் ந.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சிவகுமாா் வெங்கடாசலம் பங்கேற்றாா். நாட்டு மாட்டுப் பாலில் உள்ள புரதச் சத்துகள், அதில் உள்ள நோய் எதிா்ப்புத் தன்மைக்கான அறிவியல் காரணங்கள் குறித்து அவா் விளக்கினாா்.

கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற பி.ஆா்.சோமசுந்தரம், இயற்கை விவசாயம் தொடா்பான தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினாா்.

கல்லூரியின் முதல்வா் என்.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வா் எம்.ரமேஷ், பேராசிரியா்கள் ராமசாமி, சம்பத்குமாா், மாணவ-மாணவிகள் பலா் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.