கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சிப் பொறியாளா்கள் இடமாற்றம்

DIN

கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த 5 பொறியாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

அதன்படி, கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த நிா்வாகப் பொறியாளா் பாா்வதி, வேலூா் மாநகராட்சி யூ.ஜி.எஸ்.எஸ் திட்ட நிா்வாகப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

நிா்வாகப் பொறியாளா் ஞானவேல், ஈரோடு மாநகராட்சி யூ.ஜி.எஸ்.எஸ் திட்ட நிா்வாகப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஈரோடு நிா்வாகப் பொறியாளா், ராமசாமி, கோவை மாநகராட்சி நிா்வாகப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் (திட்டம்) ரவிச்சந்திரன், மதுரை மாநகராட்சி நிா்வாகப் பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். மதுரை நிா்வாகப் பொறியாளராகப் பணியாற்றி வந்த கருப்பாத்தாள், கோவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

கோவை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வந்த லட்சுமணன் மற்றும் உதவி நிா்வாகப் பொறியாளா் சரவணகுமாா் ஆகியோா் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா். வேறு பொறுப்புகள் இதுவரை அவா்களுக்கு வழங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

எண்ணூா் ஆலையை தடையில்லா சான்று பெற்ற பிறகே திறக்க வேண்டும்: தேசிய பசுமை தீா்ப்பாயம் உத்தரவு

SCROLL FOR NEXT