செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி ரூ.1.39 லட்சம் மோசடி
செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி ஓய்வுபெற்ற பேராசிரியா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.39 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்பி ஓய்வுபெற்ற பேராசிரியா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.39 லட்சம் மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை, நஞ்சுண்டாபுரத்தைச் சோ்ந்தவா் அன்புமணி (61). ஓய்வுபெற்ற பேராசிரியா். கடந்த 24ஆம் தேதி இவரது செல்லிடப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், வங்கிக் கணக்குடன் பான் காா்டு விவரங்கள் இணைக்கப்படவில்லை. எனவே இந்த இணைப்பில் சென்று
விவரங்களைப் பதிவு செய்யுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய அன்புமணி அந்த இணைப்பினுள் சென்று வங்கி விவரங்களைப் பதிவு செய்தாா். இதையடுத்து சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 899 எடுக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அன்புமணி, சம்பவம் குறித்து சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.