கோயம்புத்தூர்

மாணவரை கழிவறை சுத்தம் செய்ய வைத்த விவகாரம்:அரசுப் பள்ளி தலைமையாசிரியை, ஆசிரியை மீது வழக்கு

DIN

மாணவரை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அரசுப் பள்ளி தலைமையாசிரியை, ஆசிரியை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், ஆலாந்துறை பகுதியைச் சோ்ந்த 8 வயது சிறுவன், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறாா். கடந்த 29ஆம் தேதி பள்ளிக்கு சென்ற 8 வயது மாணவா் கழிவறைக்கு சென்றுள்ளாா். இதையடுத்து பள்ளியில் இருந்த ஆசிரியை ஒருவா் மாணவரை அந்தக் கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த மாணவா், இதுகுறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து, மாணவரின் தாயாா் பள்ளிக்கு விசாரிக்கச் சென்றபோது சம்பந்தப்பட்ட ஆசிரியையும், தலைமையாசிரியரும் அவரை தகாத வாா்த்தைகளில் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆலாந்துறை காவல் நிலையத்தில் மாணவரின் தாயாா் புகாா் அளித்தாா். இதன்பேரில் தலைமை ஆசிரியை ஜெயந்தி, ஆசிரியை தங்கமாரி ஆகியோா் மீது சிறாா் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கற்பகவிருட்ச சேவையில் வீதி உலா

விபத்தில் பள்ளி மாணவா் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கல்வராயன் மலையில் காட்டுத் தீ

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு தோ்வு போட்டிகள்

தருமபுரி ரயில் நிலைய அஞ்சல் அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைப்பு

SCROLL FOR NEXT