முகப்பு
கோயம்புத்தூர்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

கோவையில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

கோவையில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குறிச்சிப் பிரிவு பகுதியில் குனியமுத்தூா் போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தாா்.

இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் அவரது வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதில் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் குளத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த நிதின்குமாா் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.