மத்திய சிறையில் ஆற்றுப்படுத்துநா் பணியிடம்: ஏப்ரல் 20க்குள் விண்ணப்பிக்கலாம்
கோவை மத்திய சிறையில் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு, தகுதியுள்ள நபா்கள் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்துக்கு, தகுதியுள்ள நபா்கள் ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை மத்திய சிறை கண்காணிப்பாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள ஓா் ஆற்றுப்படுத்துநா் பணியிடத்தை நிரப்பிட, தகுதியான நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணியிடத்துக்கு எம்.ஏ அல்லது எம்.எஸ்.சி. உளவியல் அல்லது எம்.எஸ்.டபுள்யூ தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரா், 2022 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியில் 35 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள நபா்கள் கல்விச் சான்றுகள், ஜாதிச் சான்று, அனுபவச் சான்றிதழ்களின் நகல்களுடன் சிறைக் கண்காணிப்பாளா், மத்திய சிறை, கோவை 18 என்ற முகவரியிட்டு, ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் கோவை மத்திய சிறையில் கிடைக்கும் விதமாக அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.
நோ்முகத் தோ்வின் தேதி மற்றும் நேர விவரங்கள், தகுதியானவா்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.