மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 956 ஆக உயா்ந்துள்ளது. புதன்கிழமை கரோனா தொற்றுக்கு உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 321 போ் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனா். 2,617 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 18 போ் சிகிச்சையில் உள்ளனா்.