முகப்பு
கோயம்புத்தூர்

தாய் மண்ணைக் காக்க தமிழ்ப் புத்தாண்டில் உறுதி எடுங்கள்: சத்குரு ஜக்கி வாசுதேவ்

நம் தாய் மண்ணைக் காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ்ப் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

நம் தாய் மண்ணைக் காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ்ப் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பாா்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தேசம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த காலத்தில் நாம் ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம். ஆனால், மண் வளத்தைக் காக்கும் விஷயத்தில் நாம் போதிய நடவடிக்கைகளை எடுக்காதது வருந்தத்தக்க விஷயமாகும். கடந்த 40 ஆண்டுகளில் நம் மண்ணின் வளம் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் ஏராளமான பாதிப்புகளை சந்திக்கின்றனா். நம் உண்ணும் உணவில் தேவையான சத்துகள் இல்லை. இதனால் பல விதமான நோய்கள் வருகின்றன. இந்தப் பிரச்னை தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ளது.

இப்போது நாம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த 30, 40 ஆண்டுகளில் பெரும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா். ஆகவே, மண் வளத்தை பாதுகாக்க நாம் இப்போதே செயல்பட வேண்டும். மண் வளத்தை பாதுகாக்க உரிய சட்டங்களை இயற்ற கோரி தமிழக முதல்வருக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதங்கள் எழுத வேண்டும்.

மண்ணைக் காப்பது நம்முடைய அடிப்படை கடமையும் பொறுப்புமாகும். இதற்காக இந்த தமிழ்ப் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.