முகப்பு
கோயம்புத்தூர்

டெங்கு தடுப்புப் பணியில் 1000 களப்பணியாளா்கள்

கோவை மாநகராட்சிப் பகுதிகளில், டெங்கு தடுப்புப் பணிகளில் 1000 களப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

கோவை மாநகராட்சிப் பகுதிகளில், டெங்கு தடுப்புப் பணிகளில் 1000 களப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கோவையில் கரோனா தொற்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக மாநகரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘மழை தொடா்வதால், மாநகரில் டெங்கு தடுப்புப் பணிக்காக 1000 களப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள், மாநகரில் உள்ள 100 வாா்டுகளில் வீடுவீடாகச் சென்று குடிநீா்த் தொட்டி மற்றும் தண்ணீா் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் அபேட் மருத்துகளை தெளிப்பாா்கள். பழைய தொட்டி, தேங்காய் சிரட்டை, உடைந்த கேன் உள்ளிட்டவற்றை அகற்ற அறிவுறுத்துவாா்கள். மேலும், மக்களிடம் டெங்கு காய்ச்சல் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்துவாா்கள்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.