முகப்பு
கோயம்புத்தூர்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

ரயிலில் கடத்தி வரப்பட்ட 11 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாதில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் ஆலப்புழா வரை செல்லும் விரைவு ரயில் வியாழக்கிழமை கோவை வந்தது. அப்போது ரயில்வே போலீஸாா் முன்பதிவில்லா பெட்டியில் சோதனை நடத்தினா். அப்போது ரயில் கழிவறையில் மூட்டையில் 5 கிலோ குட்கா வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல புதுதில்லியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் கேரள விரைவு ரயிலின் முன்பதிவில்லா பெட்டியின் கழிவறையில் ரயில்வே போலீஸாா் நடத்திய சோதனையில் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவற்றைக் கடத்தி வந்தது யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.