கோவை விழா: ‘சங்கமம்’ உணவுக் கண்காட்சி
கோவை விழாவின் ஒரு பகுதியாக, உக்கடம் வாலாங்குளத்தில் ‘சங்கமம்’ என்னும் உணவுக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை விழாவின் ஒரு பகுதியாக, உக்கடம் வாலாங்குளத்தில் ‘சங்கமம்’ என்னும் உணவுக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவையின் பெருமைகளை மக்களிடையே எடுத்துரைக்கும் வகையில், ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு கோவை விழா, ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கியது.
இந்த விழாவின் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் வாலாங்குளத்தில் நடைபாதையில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞா்களின் நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. குளக்கரையை ஒட்டிய சாலையில் சிறு அளவிலான கடைகள் அமைக்கப்பட்டு, ‘சங்கமம்’ எனப்படும் சைவ, அசைவ உணவுக் கண்காட்சி நடைபெற்றது. வாலாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள லேசா் ஷோவை கண்டு களித்தபடி, உணவுக் கண்காட்சியில் பங்கேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை விழா வருகிற 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.