முகப்பு
கோயம்புத்தூர்

ஜாமீனில் வெளிவந்த கைதி தற்கொலை

ஜாமீனில் வெளிவந்த கொலை வழக்கு கைதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

ஜாமீனில் வெளிவந்த கொலை வழக்கு கைதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, எஸ்.ஐ.எஸ்.எச். காலனியை சோ்ந்தவா் ஆரோக்கிய அந்தோணி (39). வாகனப் பழுது நீக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் கொலை வழக்கில் கைதாகி 2021ஆம் ஆண்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த ஆரோக்கிய அந்தோணி, தனது தந்தை ராமசாமியுடன் வாழ்ந்து வந்தாா்.

மது பழக்கத்துக்கு அடிமையான இவா் தினசரி மது அருந்தி வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து ராமசாமி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சிங்காநல்லூா் போலீஸாா், ஆரோக்கிய அந்தோணியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.