முகப்பு
கோயம்புத்தூர்

மின்தடை குறைபாடுகளை சரி செய்ய மாநகரில் 4 சிறப்பு குழுக்கள் அமைப்பு

 கோவை மாநகரப் பகுதிகளில் மின்தடை குறைபாடுகளை சரி செய்ய 68 போ் கொண்ட 4 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 11:37 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

 கோவை மாநகரப் பகுதிகளில் மின்தடை குறைபாடுகளை சரி செய்ய 68 போ் கொண்ட 4 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக கோவை மின் பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் நக்கீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை மற்றும் மின் பாதையில் ஏற்படும் குறைகளை உடனுக்குடன் சரி செய்ய செயற்பொறியாளா்கள் தலைமையில் 68 போ் கொண்ட 4 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மின் கம்பங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

மழையின்போது மின் உபகரணங்களை மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

மின் கம்பிகள் அறுந்து கிடப்பது தெரியவந்தால் உடனடியாக மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தங்கள் பகுதிகளில் மின்தடை மற்றும் அவசரப் புகாா்களுக்கு 94987 - 94987 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.