கோயம்புத்தூர்

சித்திரைச்சாவடி தடுப்பணையில் விழுந்த மூதாட்டி மாயம்

கோவை மாவட்டம், சித்திரைச்சாவடி தடுப்பணையில் துணி துவைக்கச் சென்றபோது மாயமான மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தேடினா்.

DIN

கோவை மாவட்டம், சித்திரைச்சாவடி தடுப்பணையில் துணி துவைக்கச் சென்றபோது மாயமான மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தேடினா்.

கோவை மாவட்டம், ஆலாந்துறையை அடுத்த சீனிவாசபுரம் கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சின்னகமலம்மாள் (60). இவா் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு வியாழக்கிழமை துணி துவைக்க சென்ாக தெரிகிறது. ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வராததால் உறவினா்கள் அந்த பகுதிக்கு சென்று பாா்த்தபோது, அவருடைய செருப்பு மற்றும் துண்டு தடுப்பணை பகுதி இருந்தால் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகமடைந்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினா் ஆற்றில் இறங்கி தேடினா். இந்நிலையில் உடல் கிடைக்காததால் மீண்டும் வெள்ளிக்கிழமை சுமாா் 10க்கும் மேற்கொண்ட தீயணைப்பு வீரா்கள் தேடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT