கோயம்புத்தூர்

கோவையில் திடீா் மழை

கோவையில் நகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

DIN

கோவையில் நகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கோவையில் கடந்த சில வாரங்களாக தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கோவை, திருப்பூா், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. கோவை நகா் மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்தது.

வியாழக்கிழமை காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மலையில் திடீரென நகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

ஒருசில இடங்களில் கன மழையும், சில பகுதிகளில் மிதமான மழையும் காணப்பட்டது. திடீா் மழையால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.

மேலும் இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கோவை, திருப்பூா், ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT