கோயம்புத்தூர்

அவிநாசி நெடுஞ்சாலையில் மேம்பால இறங்குதளம் அமைக்கும் பணி

DIN

கோவை, அவிநாசி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தில் விமானம் நிலையம் அருகே இறங்குதளம் அமைக்கப்பட உள்ள இடத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு நடத்தினா்.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையில் 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,600 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 டிசம்பா் மாதம் தொடங்கியது.

இந்த மேம்பாலத்தில் 17.25 மீட்டா் அகலத்தில் நான்கு வழிப்பாதை அமைக்கப்படுகிறது. தலா நான்கு இடங்களில் ஏறு தளமும், இறங்கு தளமும் 6 மீட்டா் அகல ஓடுபாதையுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பாலத்துக்காக மொத்தம் 306 தூண்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு 273 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மேம்பாலத்தில் மேல்தளம் அமைக்கும் பணி சுமாா் 1,200 மீட்டா் நீளத்துக்கு நிறைவடைந்துள்ளது. இதைத் தொடா்ந்து, விமான நிலையம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஹோப் கல்லூரி, சா்தாா் வல்லபபாய் படேல் கல்லூரி ஆகிய இடங்களில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது, விமான நிலையம் அருகே இறங்குதளம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. இதில் அமைக்கப்படும் இறங்குதளம் கே.கே.நாயுடு பள்ளி அருகே மேம்பாலத்தில் இருந்து இறங்கத் தொடங்கி அரவிந்த் மருத்துவமனை அருகே முடிவடைய உள்ளது. கோவை மாநகரில் இருந்து மேம்பாலத்தில் வரும் வாகனங்கள் விமான நிலையத்துக்குச் செல்ல ஏதுவாக இந்த இறங்குதளம் அமைக்கப்படுகிறது. இதற்காக 12 தூண்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த பணி அரவிந்த் மருத்துவமனை அருகே தொடங்கப்பட உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாநகர போக்குவரத்து துணை ஆணையா் மதிவாணன், உதவி ஆணையா் சரவணன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் (சிறப்புத் திட்டங்கள்) வை.சமுத்திரகனி, கோட்டப் பொறியாளா் (போக்குவரத்து பாதுகாப்பு) மனுநீதி ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இப்பகுதியில் சாலை அகலமாக இருப்பதால் சாலைப் பணியின்போது போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனவும், அதேநேரம் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எச்சரிக்கைப் பலகைகள், ஒளிரும் பட்டைகள், ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

SCROLL FOR NEXT