பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி எவ்வித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை பாபர் மசூதி இடிப்பு நாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க- புதுச்சேரி நகரப்பகுதியில் காரும், பைக்கும் மோதி விபத்து: பதற வைக்கும் சிசிடிவி காட்சி!
இதன்படி கோவை மாவட்டத்திலும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுவதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மனு அளிக்க வரும் அனைத்து பொதுமக்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் எடுத்து வரும் உடைமைகளும் வெடிகுண்டு கண்டறியும் நவீன கருவிகளைக் கொண்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.