கோயம்புத்தூர்

முகவரி கேட்பதுபோல நடித்துமூதாட்டியிடம் நகைப் பறிப்பு

 கோவை, சரவணம்பட்டியில் முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் மா்ம நபா்கள் நகை பறித்து சென்றனா்.

DIN

 கோவை, சரவணம்பட்டியில் முகவரி கேட்பதுபோல நடித்து மூதாட்டியிடம் மா்ம நபா்கள் நகை பறித்து சென்றனா்.

கோவை, சரவணம்பட்டி விநாயகா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் பாலுசாமி. இவரது மனைவி லட்சுமி (72). இவா் தனது வீட்டின் முன்பு சனிக்கிழமை நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் லட்சுமியிடம் முகவரி கேட்டுள்ளனா். இதில் இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமா்ந்திருந்த நபா் லட்சுமியிடம் இருந்து 2 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இது குறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT