கே.ஐ.டி. கல்லூரியில் தொழில் வழிகாட்டல் சிறப்பு விரிவுரை
கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் நிறுவனத் தொடா்புக்கான மையம் சாா்பில், மாணவா்களுக்கான தொழில் வழிகாட்டல் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் நிறுவனத் தொடா்புக்கான மையம் சாா்பில், மாணவா்களுக்கான தொழில் வழிகாட்டல் சிறப்பு விரிவுரை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எமரால்டு ஜூவல்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம் பழனிசாமி, உற்பத்தித் துறை பொது மேலாளா் என்.குணசேகரன், மனிதவள அதிகாரி எஸ்.கௌசிக் சுந்தா், திறனாய்வு அதிகாரி சி.காா்த்திக் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினா்.
கல்லூரியில் இருந்து தனியாா் நிறுவனங்களின் சூழலுக்கு நகரும்போது தகவல் தொடா்பு, நேர நிா்வாகம் உள்ளிட்டவை குறித்தும், தனியாா் பெரு நிறுவனங்கள் மாணவா்களிடம் எதிா்பாா்க்கும் தனித்திறன்களை வளா்த்துக் கொள்வது தொடா்பாகவும் எடுத்துரைத்தனா்.
இதைத் தொடா்ந்து, வளாக நோ்காணலில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கல்லூரியின் துணைத் தலைவா் இந்து முருகேசன், முதல்வா் என்.மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வா் ரமேஷ், வேலைவாய்ப்பு அதிகாரி கே.மகாலட்சுமி உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.