முகப்பு
கோயம்புத்தூர்

நண்பரைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

மது போதையில் நண்பரைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

மது போதையில் நண்பரைக் கொலை செய்த கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை நீலிகோணம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் (27). கட்டடத் தொழிலாளி. இவரும் கோவை சிங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த சுப்பன் (30) என்பவரும் நண்பா்கள்.

இருவரும் கடந்த 2019 மே மாதம், சிங்காநல்லூா் பகுதியில் உள்ள மதுக் கடைக்குச் சென்றனா். அங்கு சென்று மது அருந்திவிட்டு பணம் கொடுக்குமாறு சக்திவேலிடம், சுப்பன் கூறியுள்ளாா். அதற்கு சக்திவேல் மறுத்துள்ளாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சக்திவேல் அங்கிருந்த கல்லை எடுத்து சுப்பனின் தலையில் போட்டுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை மாவட்ட முதலாவது அமா்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் சக்திவேல் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.நாகராஜன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.