கோவையில் இன்று திமுக செயற்குழுக் கூட்டம்
கோவையில் திமுக செயற்குழுக் கூட்டம் அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமையில் சனிக்கிழமை (பிப்ரவரி 26) நடைபெற உள்ளது.
கோவையில் திமுக செயற்குழுக் கூட்டம் அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமையில் சனிக்கிழமை (பிப்ரவரி 26) நடைபெற உள்ளது.
இது குறித்து கோவை மாநகா் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் நா.காா்த்திக், மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பையா என்ற கிருஷ்ணன், வடக்கு மாவட்ட பொறுப்பாளா் சி.ஆா்.ராமச்சந்திரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் சேனாதிபதி, தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வரதராஜன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை (பிப்ரவரி 26) பிற்பகல் 1 மணிக்கு சிட்ரா அருகில் உள்ள சுகுணா கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி தலைமை தாங்குகிறாா். இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அனைத்து தலைமை நிலைய நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள், பொறுப்பாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், மாநகர, வட்ட பொறுப்பாளா்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.