தேயிலைத் தூள் விலை கிலோவுக்கு ரூ.3.17 அதிகரிப்பு
கோவை ஏல மையத்தில் தேயிலைத் தூள் விலை, கிலோவுக்கு ரூ.3.17ஆக அதிகரித்துள்ளது.
கோவை ஏல மையத்தில் தேயிலைத் தூள் விலை, கிலோவுக்கு ரூ.3.17ஆக அதிகரித்துள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தேயிலை வா்த்தக மையத்தில் வாரம்தோறும் மின்னணு முறையில் தேயிலைத் தூள் ஏலம் விடப்படுகிறது. 2022ஆம் ஆண்டின் இரண்டாவது ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 43 போ் கலந்து கொண்டனா். ஏலத்திற்கு 2 லட்சத்து 41 ஆயிரத்து 430 கிலோ தேயிலைத் தூள் கொண்டு வரப்பட்டு, அதில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 151 கிலோ ஏலம் போனது.
ஒரு கிலோ தேயிலைத் தூள் விலை ரூ.120.16. ஆனால், கடந்த ஏலத்தில் ஒரு கிலோ ரூ.116.99க்கு ஏலம் போனது. இதன் மூலம் கிலோவுக்கு ரூ.3.17 தேயிலைத்தூளின் விலை அதிகரித்துள்ளது. மொத்தம் ரூ.1 கோடியே 98 லட்சத்து 44 ஆயிரத்து 544க்கு தேயிலைத்தூள் ஏலம் போனது.
இதேபோல இலை ரக தேயிலைத்தூள் 2 லட்சத்து 28 ஆயிரத்து 413 கிலோ ஏலத்துக்கு வந்தது. அதில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 651 கிலோ ஏலம் போனது. ஒரு கிலோ இலை ரக தேயிலைத் தூளின் விலை ரூ.104.56 ஆகும். இது கடந்த வாரம் ரூ.107.98ஆக இருந்தது. இதனால் இந்த வாரம் ஒரு கிலோவுக்கு ரூ.3.42 விலை குறைந்தது. இதன்படி விற்பனையான இலை ரக தேயிலையின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 66 லட்சத்து 93 ஆயிரத்து 108 ஆகும்.