முகப்பு
கோயம்புத்தூர்

மாநகரில் பூங்காக்கள் மூடல்: நடைப்பயிற்சிக்குத் தடை

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பூங்காக்களும் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், நடைப்பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பூங்காக்களும் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், நடைப்பயிற்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு தடை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் கடந்த வாரங்களில் 500க்கும் குறைவாக இருந்த நோய்த் தொற்று, வெள்ளிக்கிழமை 1,564ஆக அதிகரித்தது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம், மாநகராட்சியுடன் இணைந்து கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பூங்காக்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பந்தய சாலை உள்ளிட்ட மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் நடைப்பயிற்சி செல்வதற்கும், உடற்பயிற்சி மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.