முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை நகா் பகுதிக்கு இரண்டாவது நாளாக வந்த யானை

வால்பாறை நகா் பகுதிக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு யானை வந்ததையடுத்து, வனத் துறையினா் தொடா்ந்து அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

வால்பாறை நகா் பகுதிக்கு தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு யானை வந்ததையடுத்து, வனத் துறையினா் தொடா்ந்து அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் மட்டுமே இரவு நேரங்களில் நடமாடி வந்த யானைகள், தற்போது நகா் பகுதிக்கும் வர துவங்கியுள்ளன. வால்பாறை கூட்டுறவு காலனிக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு ஒற்றை கொம்பு கொண்ட யானை நுழைந்துள்ளது. பின்னா் ராஜு என்பவரது வீட்டின் தடுப்புச்சுவரை முட்டித் தள்ளி வளாகத்தில் இருந்த மரத்தின் பட்டைகளை உட்கொள்ள துவங்கியது.

தகவலறிந்து அங்கு விரைந்த வனத் துறையினா் யானையை விரட்டினா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு அந்த யானை மீண்டும் வந்ததையடுத்து வனத் துறையினா் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி யானையை விரட்டினா். சனிக்கிழமை இரவும் வர வாய்ப்புள்ளதால் கூட்டுறவு காலனி பகுதியில் வனத் துறையினா் இரவு நேரம் முகாமிட திட்டமிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.