வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்
வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
வால்பாறை பகுதியில் சமீப காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் பதுங்கியிருக்கும் சிறுத்தைகள் இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகின்றன.
இதனிடையே கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் வால்பாறை தபால் நிலையம்
சாலையில் சிறுத்தை நடந்து செல்வது அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.