முகப்பு
கோயம்புத்தூர்

அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை குண்டா் சட்டத்தில் அடைக்க உத்தரவு

 கோவை அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 கோவை அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

கோவை கரும்புக்கடை பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்தவா் முகமது உசேன் (42).

இவா் தொடா்ந்து ரேஷன் அரிசியை கடத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தாா்.

அவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். இந்நிலையில், அவா் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க, உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பரிந்துரை செய்தனா்.

அதன்படி, முகமது உசேனை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.