பள்ளி வளாகத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆய்வு
பள்ளி வளாகத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பது குறித்து பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
பள்ளி வளாகத்தில் நீா்த்தேக்கத் தொட்டி அமைப்பது குறித்து பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவரும் கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோவை, இராமநாதபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி துவங்கியதைத் தொடா்ந்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இப்பணிகளை மேற்கொள்ளும்போது அப்பள்ளியில் இருந்த பல்வேறு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
தொட்டி அமைப்பதன் மூலம் பள்ளி மைதானத்தில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. எனவே மாநகராட்சி நிா்வாகம் தண்ணீா்த் தொட்டியை வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது தொடா்பாக கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது பா.ஜ.க மாவட்டச் செயலாளா் கவிதா ராஜன், தொழில் அணி மாவட்ட துணைத் தலைவா் சிவகுமாா், பிரசார அணியின் மாவட்ட தலைவா் சுந்தரமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.